குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - கும்பம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - கும்பம்

திடமான நம்பிக்கையுடன் காரியத்தில் ஈடுபடும் கும்ப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஜென்ம சனியாக அமர்வது உங்களுக்கு தன்னம்பிக்கையும், சில காரியங்களை செயல்படுத்துவதில் துணிச்சலும் உண்டாகும். எதையும் வரும் என்று காத்திருக்காமல் உடனே செயல்படுத்த துவங்குவீர்கள். மகிழ்ச்சியான ஆண்டாக இருந்தாலும், கூட்டு தொழிலில் சிலர் கவனமாக இருப்பது நல்லது.
 
வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பல சிக்கல், சிரமங்கள் இனி முடிவுக்கு வரும். காரணமின்றி சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். பொது வாழ்வில் உங்களின் திறமை நல்ல செயல்களில் வெற்றியை தரும்.
 
யாரையும் நம்பி கொண்டு இருக்காமல் உடனுக்கு உடன் செயல்பட துவங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். இதுவரை எதிரி போல பார்த்தவர் கூட நண்பராவார்கள். கலைத்துறையினருக்கு கேட்டபடி கதையுடன் ஒத்துழைப்பும் கிடைக்கும். சில நேரம் பொறுமையுடன் காரியத்தை செயல்படுத்தி வளம் பெறுவீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்குதலும் தேர்ச்சி பெறுவதும் நடக்கும். உடன் பிறந்தவர்களின் மூலம் சிலருக்கு சில விடயத்தில் சங்கடங்கள் உண்டாகும். உங்களை ஏமாற்றி முன்பு பணம் பறித்து வந்தவருக்கு, சரியான பாதிப்பைத் தரும். கடமையை சரியாக செய்து வளம் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
 
அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் புதிய விடயம் உங்களுக்கு நல்ல அனுபவமாக அமையும். கோபுர கலசம் போல மற்றவர்களிடம் தனித்துவமாக மின்னுவீர்கள். எதையும் சொல்லாமலே செய்து பயன் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சியை காண்பீர்கள்.
 
பரிகாரம்:
 
செவ்வாய் கிழமை ராகு காலத்தில், சனிக்கும் நவகிரக, செவ்வாய்க்கும் வேப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு வண்ண பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாக அமையும்.